இலங்கையில் கிரிக்கெட் சர்ச்சை வழக்கில் இருந்து விலகிய நீதிபதிகள்

இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால தடை வழக்கில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரியவருகையில், கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பான மனு விசாரணை இன்று சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் இவ் வழக்கை விசாரிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்

விளையாட்டுத்துறை அமைச்சர் சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்துள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மற்றொரு நீதிபதி தம்மிக கணேபொல தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கிலிருந்து விலககுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த மனு விசாரணை வேறு நீதிபதிகள் குழாமிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

-tw