சஜித்தின் குற்றச்சாட்டை நிராகரித்த ஶ்ரீலங்கா கிரிக்கெட்

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கும் சர்வதேச கிரிக்கட் பேரவைக்கும் இடையிலான தொடர்பாடல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை வன்மையாக நிராகரிப்பதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் முழு அங்கத்தவர் என்ற வகையில் தற்போதுள்ள சிரமங்கள் மற்றும் சிக்கல் நிலைகள் குறித்து சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு தெரிவிக்க வேண்டிய கடப்பாடு ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

-ad