இலங்கை கிரிக்கெட் தடைக்கு ஐசிசி அனுமதி

சிறிலங்கா கிரிக்கெட்டை தடை செய்வதற்கு நவம்பர் மாதம் 10ஆம் திகதி எட்டப்பட்ட தீர்மானத்திற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்றுக் குழு இன்று(21) அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா கிரிக்கெட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை கிரிக்கெட் அணி பங்குப்பற்றும் போட்டிகளுக்கு அதனூடாக பாதிப்பு ஏற்படாது என நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) இலங்கை அணிக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று(21) தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானமானது, இந்தியாவில் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில் சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகளின் பங்குபற்றவுள்ளதோடு கிரிக்கெட் தடை தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மேலும், இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டாலும் அதற்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, அடுத்த வருடம் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் அது தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பார்வையாளர் மட்ட பிரதிநிதியாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

-tw