கிரிக்கெட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ஶ்ரீலங்கா கிரிக்கெட்  நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மேலதிக விசாரணை நாளைய தினம் வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மீள் பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

அதனையடுத்து, மேலதிக சமர்ப்பணங்களை தாக்கல் செய்வது நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மனுவை ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்துள்ளார்.

 

 

 

-ad