இலங்கையில் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட ஐவர் கைது

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட 05 பேர் செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் – பலஸ்தீன போர் மோதல்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதை கண்டித்து இந்த போராட்டத்தை “மக்கள் போராட்ட இயக்கம்” ஏற்பாடு செய்துள்ளதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்போது, தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்டதுடன், கலவரம் காரணமாக 05 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு,  அவர்கள் தற்போது கொள்ளுப்பிட்டி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறைஅத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

 

 

-tw