சஜித் பிரேமதாசவுக்கு எதிராக டயானா கமகே தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முறையே ஐக்கிய மக்கள் சக்தியின்; தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளில் கடமையாற்றுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

னினும் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இல்லை என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அத்துடன் கட்சியின் பதவியில் இருந்து விலகியதை டயானா கமகே மறைத்துவிட்டதாகவும் சஜித் பிரேமதாச தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

 

 

 

-tw