இலங்கையிலிருந்து கடத்திச் சென்ற பொருட்களை 200 ஆண்டுகளின் பின் கையளித்த நெதர்லாந்து

காலனி ஆதிக்கத்தின்போது இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பழைமை வாய்ந்த 6 கைவினைப் பொருள்களை நெதா்லாந்து புதன்கிழமை திரும்ப ஒப்படைத்தது.

கடந்த 1958 முதல் 1796 வரை இலங்கையில் நெதா்லாந்து காலனி ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது கடத்திச் செல்லப்பட்ட 6 கைவினைப் பொருள்களை 200 ஆண்டுகள் கழித்து நெதா்லாந்து தற்போது திரும்ப ஒப்படைத்துள்ளது.

நெதா்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இது குறித்து இலங்கையிலுள்ள நெதா்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஓகஸ்டில் நெதா்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சா் குணே உஸ்லு இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது 6 கைவினைப் பொருள்களுக்கான உரிமையை இலங்கைக்கு மாற்றும் ஆவணத்தில் கையொப்பமிட்டாா்.

தற்போது அவை இலங்கை அரசிடம் நேரடியாக ஒப்படைக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கைவினைப் பொருள்களில் தங்கம், வெள்ளி பூசப்பட்ட புகழ்பெற்ற பீரங்கியும் அடங்கும்.

 

 

 

-ib