சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

சீனாவின் இரண்டு ஹார்பின் Y-12-IV எனும் விமானங்கள் இன்று சிறிலங்கா விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்ட இந்த விமானங்கள் ரத்மலான விமான நிலையத்தில் வைத்து விமானப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சீனாவால் தயாரிக்கப்பட்ட ஹார்பின் Y-12-IV எனும் விமானம், பயணிகள் போக்குவரத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தின் முதல் வகையான Y-12 எனப்படும் விமானம் 1982 ஆம் ஆண்டு ஜுலை மாதம் தயாரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் Y-12 விமானங்கள் சிறிலங்கா விமானப்படையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது ஹார்பின் Y-12-IV எனும் விமானங்கள் சிறிலங்கா விமானப்படையின் கோரிக்கைக்கமைய, இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

-ib