இலங்கை கிரிக்கெட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிப்பதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (05) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமது கட்சிக்காரரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு கால அவகாசம் தேவை என நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி வழக்கு விசாரணை டிசம்பர் 13ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதுநாள் வரை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நீதிமன்றில் உறுதியளித்தார்.

 

 

-tw