ஜூன் 2024 இறுதிக்குள் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க பொதுமக்களின் ஆதரவைக் நாடும் அமைச்சர் திரான்

போதைப்பொருள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கையாள்வதற்கான முயற்சிகளில் காவல்துறையினருடன் இணைந்து செயற்படுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

அம்பலாங்கொடையில் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், இலங்கையில் அனைத்து பாதாள உலக செயற்பாடுகளையும் ஒழிக்க வேண்டும் என்ற தனது இலக்கில் இருந்து விலகப் போவதில்லை என உறுதியளித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் இந்த நடவடிக்கைகளை மிகவும் கண்டிப்பாக செயல்படுத்துகிறோம். எந்தவொரு உயர்மட்ட பணியாளர்கள் என்ன சொன்னாலும், போதைப்பொருள் வியாபாரிகளைப் பாதுகாக்க நான் அனுமதிக்க மாட்டேன். காவல்துறைக்கு ஜூன் 30 வரை மட்டுமே அவகாசம் கொடுத்துள்ளேன். ஜூன் 30 ஆம் திகதிக்குள் இந்த நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் தொடர்பில் முழுமையான மாற்றம் ஏற்பட வேண்டும்” என அமைச்சர் அலஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் பேசிய அமைச்சர், சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால் தனது இலக்கை அசைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். இதுபோன்ற செயல்களைச் செய்வதன் மூலம் எங்களைத் தடுக்க முடியும் என்று அவர்கள் நினைத்தால், அது நடக்காது,” என்று அவர் உறுதியளித்தார்.

 

 

-ad