வடக்கு பிராந்தியத்தில் கடுமையான வெப்பம் நீடித்து வருவதால், தீபகற்ப மலேசியாவின் 12 பகுதிகளுக்கு மலேசிய வானிலை ஆய்வு மையம் முதலாம் நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கெடாவின் பாடாங் தெராப் பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாக 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானதைத் தொடர்ந்து, அங்கு விடுக்கப்பட்டிருந்த இரண்டாம் நிலை (வெப்ப அலை) எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும்போது இந்த முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இன்று காலை 6 மணிக்கு மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) வெளியிட்ட அறிக்கையில், முன்னதாக 10 ஆக இருந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பெர்லிஸ்; கெடாவில் உள்ள பாலிங், சிக், பெண்டாங், போக்கோ செனா, குபாங் பாசு, லங்காவி, கோலா மூடா மற்றும் பண்டார் பாரு; பினாங்கின் தீமோர் லாட் மாவட்டம்; பேராக் மாநிலத்தின் ஹுலு பேராக்; மற்றும் நெகிரி செம்பிலானின் ரெம்பாவ் ஆகிய 12 இடங்கள்.
தினசரி நிலவும் தற்போதைய வெப்பமான வானிலை நிலவரம் குறித்து பொதுமக்கள் https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ என்ற இணையதள முகவரியை அணுகலாம் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-fmt
























