RON95 பெட்ரோல் கசிவைத் தடுக்க அதிக ஆபத்துள்ள எரிபொருள் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்

இது குறித்து அந்த அமைச்சகத்தின் அமலாக்கப் பணிப்பாளர் நாயகம் அஸ்மான் ஆடம் கூறுகையில், “இந்தக் கேமராக்களின் காட்சிகள் நேரடியாக அமைச்சகத்தின் அமலாக்கக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் கண்காணிப்புப் பணிகளை இன்னும் திறம்பட மேற்கொள்ள முடியும்,” என்று தெரிவித்தார்.

அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உள்ள மாநிலங்களில், எரிபொருள் நிறுவனங்களுடன் இணைந்து இந்த CCTV பொருத்தும் திட்டத்தின் முன்னோட்டக் கட்டம் தற்போது நிலைகுறித்த அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில் CCTV தொழில்நுட்பத்தை இன்னும் தீவிரமாகப் பயன்படுத்தத் தொடங்குவோம். இதன் மூலம் பெட்ரோல் கசிவு மற்றும் முறைகேடு தொடர்பான பிரச்சினைகளை இன்னும் திறம்பட தீர்க்க முடியும்,” என்று அஸ்மான் ஆடம் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

அஸ்மான் ஆடம்

கூடுதல் டேங்க்கள் பொருத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி, கடத்தல் கும்பல்கள் பெட்ரோல் நிலையங்களில் மீண்டும் மீண்டும் எரிபொருளை வாங்குவதாக அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் நிலையங்களின் விற்பனைப் புள்ளி தரவுகளைக் கண்காணிக்கவும், சில்லறை விற்பனைப் போக்குகளைப் பதிவு செய்யவும் அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

“தொலைதூர நிலையங்களில் RON95 பெட்ரோல் விற்பனை திடீரென அதிகரித்தால், கணினி எச்சரிக்கை செய்யும். உடனடியாக அதிரடிப் படைகள் அந்த இடத்திற்கு அனுப்பப்படும்,” என்று அவர் விளக்கினார்.

மேலும், எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்படுவதாகவும் அஸ்மான் கூறினார். கடந்த 2024-ஆம் ஆண்டில் 1,713 ஆக இருந்த RON95 பெட்ரோல் முறைகேடு வழக்குகள், 2025-இல் 1,300 ஆகக் குறைந்துள்ளன.

அமைச்சகத்தின் கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் முறைகேடுகளுக்குத் துணை போன பெட்ரோல் நிலைய உரிமையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

-fmt