கோலா லங்காட் காவல்துறைத் தலைவர் அக்மல்ரிசால் ராட்ஸி, இந்த வழக்கு “திடீரென மரணம்” (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அக்மல்ரிசால் ராட்ஸி கூறுகையில், அந்தச் சிறுமி தலையில் பலத்த காயமடைந்ததாகத் தெரிவித்தார்.
நேற்று, சிலாங்கூர் மாநிலம், கோலா லங்காட் அருகே உள்ள தஞ்சோங் செபாட் என்னுமிடத்தில் உள்ள ஒரு கோவிலில், 17 வயது சிறுமி ஒருவர் மீது மர தூண் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
இரவு சுமார் 8.35 மணியளவில் ஒரு புகார் பெறப்பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் அக்மல்ரிசல் ராட்ஸி தெரிவித்தார்.
“அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனது குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றிருந்ததாகத் தெரிகிறது,” என்று அவர் கூறியதாக பெரிட்டா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான செயல்களுக்கான எந்தக் கூறுகளையும் காவல்துறை கண்டறியவில்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
























