கஞ்சா வளர்ப்பு தொடர்பான போலிப் பதிவு குறித்து அமைச்சரின் அலுவலகம் MCMC-இல் புகார் அளித்துள்ளது

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம், அதன் அமைச்சர் முகமட் சாபு அரசு ஊழியர்களை வீட்டிலேயே கஞ்சா வளர்க்க ஊக்குவித்ததாகக் கூறி பரப்பப்பட்ட போலிப் புகைப்படம் தொடர்பாக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (MCMC) புகார் அளித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு அவதூறானது, உண்மையற்றது மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியது என்று அமைச்சரின் அலுவலகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

“அதன்படி, இதில் தொடர்புடையவர்கள் மீது விசாரணை நடத்தி மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (MCMC) அதிகாரப்பூர்வ புகார் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும், துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ சேனல்களைச் சார்ந்திருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சரின் அலுவலகம் சமூக ஊடகப் பதிவின் ஸ்கிரீன்ஷாட் (Screenshot) ஒன்றையும் பகிர்ந்துள்ளது. அதில் முகமட் சாபுவின் உருவத்துடன் கஞ்சா செடிகளின் படமும் இடம்பெற்றிருந்தது. மேலும், “மேற்காசிய மோதல்களைத் தொடர்ந்து, அரசு ஊழியர்கள் வீட்டிலேயே கஞ்சா வளர்க்கத் தொடங்கலாம் என்று மாட் சாபு பரிந்துரைக்கிறார்” என்ற வாசகமும் அப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

கஞ்சா பயிரிடுவதும் பயன்படுத்துவதும் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952-இன் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், மீறினால் சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தப் பதிவிலேயே ஒரு மறுப்பு அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.”

“கடந்த மாதம், முகமட் சாபு தனது அமைச்சக அதிகாரிகளைச் சொந்தமாகப் பயிர்களை நடுமாறு உத்தரவிட்டிருந்தார். இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அவர் அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

-fmt