அந்த ஆண்கள், 27 மற்றும் 33 வயதுடையவர்கள், நேற்று இரவு கிள்ளானில் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் பாடில் மார்சுஸ் கூறுகையில், சந்தேக நபர்களில் ஒருவருக்கு 17 குற்றப்பின்னணிகள் இருப்பதாகவும், மற்றொருவருக்கு ஐந்து குற்றப்பின்னணிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நேற்று கோலாலம்பூர், பங்சார் பகுதியில் உள்ள ஜாலான் தெலாவியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து இரண்டு நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று இரவு 11.45 மணியளவில் சிலாங்கூர், கிள்ளான் பகுதியில் 27 மற்றும் 33 வயதுடைய அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக மாநகர காவல் துறைத் தலைவர் பாடில் மார்சூஸ் தெரிவித்தார்.
“காவல்துறையினர் ஒரு துப்பாக்கி, ஒரு தோட்டா மற்றும் ஒரு போலி கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவருக்கு 17 குற்றப் பின்னணிகளும், மற்றொருவருக்கு ஐந்து குற்றப் பின்னணிகளும் உள்ளன”.
சந்தேக நபர்கள் இருவரும் ஏப்ரல் 29 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்த அவர், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்த கூடுதல் விவரங்களைப் பெற FMT காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளது.
























