பேராக் விடுதிப் பள்ளி ஒன்றில் இன்ஃப்ளூயன்ஸா A தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளியைச் சேர்ந்த 46 மாணவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா போன்ற காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14 வரை காய்ச்சல் அறிகுறிகளுடன் இருந்த 61 மாணவர்களை சுகாதார அதிகாரிகள் பரிசோதித்து மதிப்பீடு செய்ததாகவும், அவர்களில் 14 பேருக்கு மேல் சுவாசப்பாதை தொற்றும், ஒருவருக்கு கண் நோயும் இருப்பது கண்டறியப்பட்டதாக பேராக் மாநில சுகாதாரக் குழுவின் தலைவர் ஏ. சிவநேசன் தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களின் நிலையும் சீராக இருப்பதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. புதிய பாதிப்புகள் மற்றும் ஆய்வக சோதனை முடிவுகள் உள்ளிட்ட சூழ்நிலைகளை மாநில சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணிக்கும். தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும், என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அறிகுறிகள் உள்ள குழந்தைகள் குணமடையும் வரை அவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை பெற்றோர்களும் பாதுகாவலர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று சிவநேசன் கூறினார்.
அறிகுறிகள் நீடித்தாலோ அல்லது மோசமடைந்தாலோ குழந்தைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை ஊக்குவிக்குமாறும், இந்தச் சேவை வழங்கப்படும் சுகாதார நிலையங்களில் இருந்து இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி போடுவதைப் பரிசீலிக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-fmt























