பாதுகாப்பு காவலர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களைத் தாண்டி, பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு தெரிவித்துள்ளது.

G25 கூறுவதாவது, இத்தகைய நடவடிக்கைகள் அவசியமானவையாக இருந்தாலும், மாணவர்களால் நிகழ்த்தப்படும் வன்முறையின் அடிப்படைக் காரணங்களை அவை தீர்க்கவில்லை.

G25, பள்ளிப் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் நலன் குறித்து, பங்குதாரர்கள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு சுயாதீனமான, விரிவான ஆய்வை மேற்கொள்ள அழைப்பு விடுத்தது

பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்யக் காவலர்கள், கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு அப்பால் சிந்திக்குமாறு ஓய்வுபெற்ற மூத்த அரசு ஊழியர்களின் ‘G25’ அமைப்பு இன்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஒரு அறிக்கையில், இத்தகைய நடவடிக்கைகள் தேவையானவை தான் என்றாலும், மாணவர்களால் நடத்தப்படும் வன்முறைகளுக்கான மூலகாரணங்களுக்கு இவை தீர்வாக அமைவதில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

“நாம் மூலகாரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நமது குழந்தைகள் நாளுக்கு நாள் அதிக மன அழுத்தங்கள் நிறைந்த ஒரு சூழலிலேயே வளர்ந்து வருகிறார்கள்,” என்று அது கூறியுள்ளது.

“மேலும் பொழுதுபோக்குகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகக் குழந்தைகள் இணையத்தில் வன்முறையை மிகவும் எளிதாக எதிர்கொள்கிறார்கள்.”

யோங் பெங், ஜொகூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்துவந்த 4-ஆம் படிவ மாணவி ஐரின் சோபியா கைருல் பைசல் கொல்லப்பட்டது உட்பட, மாணவர்களின் உயிரைப் பறித்த தொடர் பள்ளி வன்முறைச் சம்பவங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த அமைப்பு இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் பள்ளிகளில் மொத்தம் 5,681 கேலிவதை (Bullying) சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று வெளிப்படுத்தியிருந்தார்.

மாணவர் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு 1,000 பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்களை (CCTV) பொருத்துவதற்காக அரசாங்கம் கூடுதலாக ரிம 15 மில்லியன் ஒதுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகு மட்டுமே நடவடிக்கை எடுக்கும் இந்த அணுகுமுறை குறித்து G25 கவலை தெரிவித்துள்ளது. “மற்றொரு நடவடிக்கையையும் மறுஆய்வையும் அறிவித்துவிட்டு, அடுத்த அசம்பாவிதம் நடக்கும் வரை அதைக் கடந்து செல்வது சரிவராது,” என்று அது குறிப்பிட்டுள்ளது.

“குழந்தைகளின் பாதுகாப்பையும் உயிரையும் கையாளும் போது இது போதுமானது அல்ல,” என்றும் அது கூறியுள்ளது.

ஒவ்வொரு தனிப்பட்ட அசம்பாவிதத்திற்குப் பிறகும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்காமல், அனைத்துத் தரப்பினரையும் நிபுணர்களையும் உள்ளடக்கிய சுயாதீனமான, விரிவான ஒரு பள்ளிப் பாதுகாப்பு மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த மறுஆய்வைக் கொண்டுவர வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த மறுஆய்வில் இயல்சார் பாதுகாப்பு, விடுதி மேற்பார்வை, CCTV கண்காணிப்பு எல்லை, கேலிவதை மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகள், மனநல ஆதரவு மற்றும் தற்போதுள்ள கொள்கைகளின் செயல்திறன் போன்றவை ஆராயப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.