இந்த விலைகள் நவம்பர் 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
மானியமற்ற RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 15 சென் குறைக்கப்பட்டு, முறையே ரிம 4.27 மற்றும் ரிம 5.12 ஆக விற்பனை செய்யப்படும் என நிதி அமைச்சு இன்று மாலை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், RON97 பெட்ரோல் விலை 20 சென் குறைக்கப்பட்டு, லிட்டருக்கு ரிம 4.70 ஆக விற்பனை செய்யப்படும்.
BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RON95 பெட்ரோல் தொடர்ந்து லிட்டருக்கு ரிம 1.99 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். அதேவேளை, BUDI Diesel திட்டத்தின் கீழ் டீசல் விலை லிட்டருக்கு ரிம 2.10 ஆகத் தொடரும்.
மானிய விலை பெட்ரோல் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (SKPS) கீழ் வழங்கப்படும் பெட்ரோல் லிட்டருக்கு ரிம 2.05 என்ற விலையிலும், மானிய விலை டீசல் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (SKDS) கீழ் வழங்கப்படும் டீசல் லிட்டருக்கு ரிம 2.15 என்ற விலையிலும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படும்.
இந்த விலைகள் நவம்பர் 11ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளால் பொதுமக்களுக்கும் வணிகத் துறையினருக்கும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில், மத்திய அரசு தொடர்ந்து எரிபொருள் மானியங்களை வழங்கும் என அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தபடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் சுமையைக் குறைக்க, அடுத்த ஆண்டு எரிபொருள் மானியங்களுக்காக ரிம 40 பில்லியனை அரசாங்கம் செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
























