அமைச்சர்களின் சொத்துக்களை வெளிப்படுத்தல் ஆபத்தாக முடியலாம்

அமைச்சர்களும் அவர்களின் குடும்பத்தாரும் அறிவிக்கும் சொத்துவிவரத்தைப் பொதுவில் வெளிப்படுத்துவது “அவர்களுக்கு ஆபத்தாக முடியலாம்”.

“இந்த விவரங்களைப் பகிரங்கப்படுத்தினால், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடலாம்”, என்று பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று தெரிவித்தார்.

புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி இதனைத் தெரிவித்தார்.

எப்படிப்பட்ட “ஆபத்துகள்” என்பதை அவர் விவரிக்கவில்லை.ஆனால், தனிப்பட்ட ஒருவரின் சொத்து விவரத்தை வெளியார் தெரிந்துகொள்ளும்போது அதனால் அவருக்கு ஆபத்து நேரலாம் என்று மட்டும் அவர் குறிப்பிட்டார்.