கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், கேட்டுக் கொள்ளப்பட்டால் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சொத்துக்களை அறிவிக்கத் தயாராக இருக்கிறார்.
அரசியல்வாதிகளும் அரசாங்க ஊழியர்களும் சொத்துக்களை அறிவிப்பது என்பது பழைய விஷயம் என பாஸ் ஆன்மீகத் தலைவருமான நிக் அஜிஸ் சொன்னார்.
“விதிமுறைகள் கேட்டுக் கொண்டால் நானும் என்னுடைய ஆட்சி மன்ற உறுப்பினர்களும் எங்கள் சொத்துக்களை அறிவிப்போம்,” என அவர் இன்று கோத்தா பாருவில் நிருபர்களிடம் கூறினார்.
நிக் அஜிஸும் அவரது குடும்ப உறுப்பினர்களும் முழுக்க முழுக்க வெளிப்படையாக நடந்து கொள்கின்றனர். ஊழலிலிருந்து விடுபட்டுள்ளனர் என்பதைக் காட்டுவதற்கு தங்கள் சொத்துக்களை எம்ஏசிசி-யிடம் அறிவிக்க வேண்டும் என Agenda என அழைக்கப்படும் Pertubuhan Angkatan Generasi Muda Melayu Kelantan அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள் பற்றி அவர் கருத்துரைத்தார்.
பெர்னாமா