ரோஸ்மா மன்சூர் பொருள் வாங்க ஆஸ்$100,000 செலவிட்டார் என்ற தகவலைத் தந்தவரே அந்நகரின் மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான கார்ல் காப்பின் விளம்பர அதிகாரிதான் என்று சிட்னி மார்னிங் ஹரால்ட் பத்தி எழுத்தாளர் எண்ட்ரு ஹார்னரி கூறுகிறார்.
சனிக்கிழமை அச்செய்தித்தாளின் கிசிகிசு பகுதியில் வெளிவந்த தகவல்கள் உண்மையானவைதான் என்று உறுதியாகக் கூற முடியும் என்றாரவர். அச்செய்தியை வெளியிடு முன்னர் காப்பிடம் அதை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.
“அவர் (காப்) சொன்னதைதான் வெளியிட்டோம். எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது”, என்று ஹார்னரி மலேசியாகினி மின்னஞ்சல்வழி நடத்திய நேர்காணலில் குறிப்பிட்டார்.