இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிப்பு!

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கடைகளில் காட்சிக்கு வைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ளவற்றை உடன் அகற்றுமாறும் தமிழ்நாடு அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் மூத்த அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

“இலங்கைப் பொருள் களைப் புறக்கணிப்போம்” என்ற அமைப்பு மேற்கொண்ட தீவிர பிரசாரங்களை அடுத்து சக்தி சரவணன் என்ற மூத்த அதிகாரி இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

தமிழக அரசு ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தற்போது இலங்கை உற்பத்திப் பொருள்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என அரச கூட்டுறவுச் சங்கங்களே கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள அரச நகர கூட்டுறவுச் சங்கங்களின் கடைகளிலிருந்து அந்தப் பொருள்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கையில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள், மருந்துப் பொருட்கள், தேயிலை ஆகியவற்றுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

TAGS: