பெர்காசா மற்றும் டிஎபி ஆகிய இரண்டில் எது மிக இனவாதமானது என்பது பற்றி சொற்போர் நடத்த பெர்காசாவின் இப்ராகிம் அலி டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கிற்கு சவால் விட்டுள்ளார்.
“சொற்போரின் தலைப்பு: ‘பெரிய இனவாதி யார் மற்றும் பெரிய குழப்பவாதி யார்?’ “என்று புத்ராஜெயாவில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பெர்காசாவைவிட டிஎபிதான் பெரிய இனவாதி என்று தன்னால் நிரூபிக்க முடியும் என்றார்.
“டிஎபிதான் பெரிய இனவாதி என்பதை நிரூபிக்க புள்ளிவிபரங்களையும் நாளிதழ் அறிக்கைகளையும் தீர்மானங்களையும் கொண்டு வருவேன். எப்படி டிஎபி அதன் அரசியல் ஆட்டத்தை ஆடியது என்பதை மக்களிடம் காட்டுவதற்காக நான் மே 13 குறித்த ஆவணங்களை வைத்திருக்கிறேன்”, என்று அவர் கூறினார்.
“அது நியாயமானதாக இருக்கும் வரையில் யார் வேண்டுமானாலும் அச்சொற்போருக்கு ஏற்பாடு செய்யலாம். பார்வையாளர்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சுயேட்சையான நடுவர் இருக்க வேண்டும் என்பதோடு அது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.