பிகேஆர் தலைவர் ஒருவர் ‘கல்வாத்’-துக்காக குவாந்தான் பாலோக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபரையும் இன்னொரு மனிதருடைய மனைவி என நம்பப்படும் ஒரு மாது-வையும் பாகாங் இஸ்லாமிய விவகாரத் துறையின் அமலாக்க அதிகாரிகள் அதிகாலை மூன்று மணி வாக்கில் கைது செய்ததாக அந்தத் துறையின் துணை இயக்குநர் முகமட் கசாலி அப்துல் அஜிஸ் கூறினார்.
மேல் விசாரணைகள் தொடருகின்றன என்று அந்த விஷயத்தை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அவர் கூறினார்.
என்றாலும் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை Imam Mahdi (இஸ்லாத்தின் மீட்பாளர்) எனக் கூறியதாக சொல்லப்படும் அந்த பிகேஆர் தலைவர் குறித்து கூடுதல் விவரங்களைத் தர முகமட் கசாலி மறுத்து விட்டார்.
பொதுத் தேர்தலுக்கு ஏற்பாடு செய்வதற்கான விவாதங்களை நடத்துவதற்காக பிகேஆர் இந்த வார இறுதியில் குவாந்தானில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பெர்னாமா