முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி, தமக்கு இளைஞர் விளையாட்டு அமைச்சு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ள பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் மீது வழக்குப் போடப் போவதாக இன்று மருட்டியுள்ளார்.
“பாஸ் புல்லுருவிகளின் கருவி” என மாஹ்புஸை வருணித்த அவர், பிஎன் பக்கம் இளைஞர்களைக் கவரும் நோக்கத்தைக் கொண்ட திட்டக்களுக்காக அந்த அமைச்சு தமக்கு 30 மில்லிய ரிங்கிட் வழங்கியுள்ளதாக கூறப்படுவதை நிராகரித்தார்.
“பொக்கோக் செனா எம்பி என் மீது குற்றம் சாட்டியுள்ளது போல இளைஞர் விளையாட்டு அமைச்சுடன் தாம் எந்தப் பயிற்சித் திட்டம் மீதும் பேச்சு நடத்தவில்லை,” என்றும் ஹசான் சொன்னார்.