முர்தாட் வீடியோவை இன்னும் 2 வாரங்களில் வெளியிட ஜாத்தி வாக்குறுதி

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கு ஆதாரம் எனத் தாம் கூறிக் கொள்ளும் வீடியோவை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடுவதாக ஹசான் அலி வாக்குறுதி அளித்துள்ளார்.

அந்த வீடியோ ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர் “இறுதி நேர நடைமுறைகளை” மேற்கொள்ள வேண்டியிருப்பதாக ஜாத்தி என அழைக்கப்படும் Melayu Jalur Tiga அமைப்பின் தலைவருமான அவர் சொன்னார்.

ஒப்புதல் வாக்குமூலம் வழங்க முன் வந்துள்ள “பாதிக்கப்பட்டவர்களுடைய” அடையாளங்களைப் பாதுகாப்பதும் அவற்றுள் அடங்கு என முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினரும் பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருமான ஹசான் கூறினார்.

“அவர்களது பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் அளிக்க முடியும் ? அப்படி யாரும் உத்தரவாதம் அளித்தால் இன்று கூட அதனை ஒளிபரப்புவதற்கு எந்தப் பிரச்னையும் இல்லை,” என்றும் ஹசான் குறிப்பிட்டார்.

TAGS: