புக்கிட் மேராவில் கைவிடப்பட்ட Asian Rare Earth(ஏஆர்இ)ஆலையிலிருந்தும்,ஈப்போவில் புக்கிட் கெலேடாங்கில் உள்ள அவ்வாலையின் கழிவுகொட்டும் இடத்திலிருந்தும் மிதமிஞ்சிய அளவில் கதிரியக்கம் வெளிப்படுவதாகக் கூறப்படுவது பற்றி விவாதம் நடத்தக் கோரிக்கை விடுக்கும் தீர்மானத்தை மக்களவை ஏற்றுக்கொண்டிருக்கிறது.
நேற்று, பத்து காஜா டிஏபி எம்பி போங் போ குவான் அத்தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதன்மீது இன்று மாலை மணி 4.30க்கு ஒரு மணிநேரத்துக்கு விவாதம் நடைபெறும்.