ஐ.நா தீர்மானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

ஐ.நா மன்ற மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றிருக்கிறது. இத்தீர்மானமானது இன வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் நன்மையளிக்குமென நம்புவதாக அதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நா மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானம், இலங்கை அரசாங்கமானது தற்போதைய நிலையிலிருந்து விலகி மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான காத்திரமான முடிவுகளை எடுப்பதற்கும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் நோக்கில் உணரப்படக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உதவும் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானதம் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக இந்த தீர்மானத்தோடு தொடர்புபட்டிருந்த நாடுகளுடன், மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடருக்கு முன்னரும், கூட்டத்தொடரின் போதும் பல்வேறு தொடர்பாடல்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்த தாகவும், இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் செயலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடணும் இராஐதந்திரத்துடனும் செயற்பபட்டதென்பது இப்பொழுது தமிழ் மக்களுக்கு தெளிவாகியிருக்குமென்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.