செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங், தமது கைத் தொலைபேசியில் கிடைத்துள்ள பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை நோக்கமாகக் கொண்ட ஆபாச வீடியோ, செய்திகள் தொடர்பில் எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக, தொடர்பு ஆணையத்திடம் புகார் செய்துள்ளார்.
Anuwar pembohong (அன்வார் பொய்யர்), Anwar tidak bermoral ( அன்வார் தார்மீகப் பண்புகள் இல்லாதவர்) என்னும் தலைப்புக்களைக் கொண்ட அந்தச் செய்திகளுடன் இரண்டு வினாடிகளுக்கு ஒடும் தரம் குறைந்த வீடியோவும் தரம் குறைந்த படமும் இணைக்கப்பட்டுள்ளதாக தியோ கூறினார்.
அந்த இரண்டும் monochromeல் இருந்தன. நிர்வாணமாக ஆடவர் ஒருவர் அவற்றில் காணப்படுகிறார்.
மார்ச் மாதம் 19ம் தேதி இரவு மணி 10.28க்கும் 10.55க்கும் இடையிலும் அடுத்த நாள் காலை மணி 7.52க்கும் தமக்கு அந்தச் செய்திகள் கிடைத்ததாக தியோ சொன்னார். எந்த எண்ணிலிருந்து அவை வந்தன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
மலேசியாகினி பார்த்த அந்தப் படமும் வீடியோவும் டத்தோ டி என தங்களை அழைத்துக் கொண்ட மூவர் அம்பலப்படுத்திய செக்ஸ் வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.