சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் தனி நாடாக பிரிந்து சென்றபின் அவ்விரு நாடுகளுக்கும் இடையே எண்ணை வளம் தொடர்பில் போர் ஏற்பட்டுள்ளது.
இந்த இருநாடுகளின் எல்லைப் பகுதியில் ஹெக்லிக் என்ற இடத்தில் எண்ணைய் கிணறு உள்ளது. இதற்கு இருநாடுகளும் சொந்தம் கொண்டாடி வருவதால், மோதல் நடந்து வருகிறது.
தெற்கு சூடானின் 98 சதவிகித வருமானம் எண்ணைய் கிணறுகளை நம்பியே உள்ளது. இங்கு உற்பத்தியாகும் எண்ணையை சூடான் துறைமுகம் வழியாகத்தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதற்காக குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து சூடான் இந்த குழாய்களை மூடிவிட்டது. இதனால் சூடான் மீது தெற்கு சூடான் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக சூடான் இராணுவ விமானங்கள் தெற்கு சூடான் மீது சரமாரியாக குண்டு வீசின. இதில் ஏராளமானோர் பலியாகி இருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.
எனவே, இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த பதட்டத்தை தணிக்க ஆப்ரிக்க கூட்டமைப்பு நாடுகள் முயன்று வருகின்றன.