இருதயத்தில் பிரச்னைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை கோத்தா பாரு குபாங் கெரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவனையில் சேர்க்கப்பட்ட கிளந்தான் மந்திரி புசார் நிக் அஜிஸ் நிக் மாட் உடல் நிலை சீராக இருந்து வருகிறது.
அந்தத் தகவலை அவரது உறவினரும் புக்கிட் துகு சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் பாத்தா ஹருண் வெளியிட்டார். 81 வயதான நிக் அஜிஸ் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
“பல நிகழ்ச்சிகள் காரணமாக அவர் களைப்படைந்துள்ளார்,” என அவர் குறிப்பிட்டார்.
இன்னொரு மருத்துவச் சோதனைக்குப் பின்னர் மந்திரி புசார் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அப்துல் பாத்தா தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் கிளந்தான் சுல்தான், ஐந்தாவது சுல்தான் முகமட் நிக் அஜிஸைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
பெர்னாமா