இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை 2009-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டில் சுமார் 8000 சீனர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் 16,000 சீனர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைக் காலத்தில் வர்த்தக மற்றும் ஏனைய உறவுகளை இலங்கையும் சீனாவும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இலங்கையை நோக்கி சீனர்கள் அதிகளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சீனா தனது இராணுவ படைத் தளமொன்றை இலங்கையில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்காக சீனாவிலிருந்து ஆயிரக்கணக்கான சிறைக்கைதிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்த ஏதுவாக தனது படைத்தளத்தை இலங்கையின் வடக்கே நிறுவ சீனா தீர்மானித்துள்ளதாக இன்னுமொரு தகவல் குறிப்பிடுகிறது.