லண்டன் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மீண்ட ஈழத்து சிறுமி துஸா சிரிப்புடன்!

லண்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மீண்ட ஈழத் தமிழ்ச் சிறுமியான துஸா கமலேஸ்வரன் புன்முறுவலுடன் குதூகலமாகக் காணப்படுகின்ற படங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.

துஸா என்கின்ற ஐந்து வயதேயான இந்தச் சிறுமி லண்டனில் உள்ள தனது மாமாவின் கடையில் சந்தோசமாக நடனம் ஆடிக் கொண்டிருந்த வேளையில் தான் காடையர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானார்.

ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துஸா மருத்துவர்களின் பல நாள் சிகிச்சைக்குப் பின்னர் குணமானார்.

டான்சராக வர வேண்டும் என்று கனவு கண்ட இந்தச் சிறுமி தற்போது சக்கர நாற்காலியின் உதவியுடன் தான் நடமாடி வருகின்றார்.

தெற்கு லண்டனில் உள்ள சுப்பர் மாக்கெட் ஒன்றில் குறித்த துயரச் சம்பவம் இடம்பெற்று தற்போது ஒரு வருடம் ஆகின்றது.

பிரித்தானியாவின் ஆயுத கலாசாரத்துக்கு இளைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பலிக்கடாவான இந்தச் சம்பவம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஏராளமான அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடியாக துசாவும் அவரது தாயாரான சர்மிளாவும் கலந்து கொண்டு பேசினர்.

இலங்கையின் இனப்பிரச்னை காரணமாக அங்கிருந்து வெளியேறிய இச் சிறுமிக்கு லண்டனில் இடம்பெற்ற இந்த துயரச் சம்பவத்தை யாராலும் மறந்து விட முடியாது.

துப்பாக்கிச் சூட்டை நடாத்திய காடையர்கள் தற்போது தண்டனையை எதிர் நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.