உங்கள் கருத்து: “பொது மக்கள் பங்கு கொள்ளும் பேரணியில் போலீசார் தங்கள் ஆயுதங்களை உருவுவதே கிரிமினல் அச்சுறுத்தலாகும். ஹிண்ட்ராப் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டை ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் சுமத்தியது என் நினைவுக்கு வருகிறது.”
“போலீஸ் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரரை துப்பாக்கியை குறி வைத்ததை நான் பார்த்தேன்”
ஜெரார்ட் லூர்துசாமி: ஆயுதம் இல்லாத ஒர் ஆர்ப்பாட்டக்காரரிடம் துப்பாக்கியைக் காட்டுவதும் இன்னொரு வழக்கமான நடைமுறையா ?
பெர்சே 3.0 பேரணியின் போது நமது போலீசார் காட்டிய அத்தகைய தொழில் முறை குறித்து உள்துறை அமைச்சர் பெருமை கொள்கிறாரா ? ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் அதனை விளக்க வேண்டும்.
லிம் சொங் லியோங்: கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் போலீசார் தனித்தனியாக ஒடிக் கொண்டு துப்பாக்கியைக் காட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அவர்கள் கூட்டாக வரிசையாக நின்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பரவலாகச் செல்வதற்கு வழி வகுக்க வேண்டும்.
ஆனால் நமது அரச மலேசியப் போலீஸ் படை வீரர்கள் வேறு விதமானவர்கள். இங்கு ஒரே ஒரு போக்குவரத்துப் போலீஸ்காரரை மட்டுமே நாம் பார்க்கிறோம். தாம் மருட்டலுக்கு இலக்காகி இருப்பதாக அவர் உணர்வது நிச்சயம். ஆகவே மருட்டல் இல்லாமல் இருந்தாலும் அது இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தம்மைத் தற்காப்பதற்கு அவர் இவ்வாறுதான் செய்வார்.
அதிகாரிகள் ‘மாட் ரெம்பிட்’களுக்கு சீருடையும் துப்பாக்கியும் கொடுத்தால் நமக்கு இதுதான் கிடைக்கும்.
????: முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் அம்னோ போலீஸ் படையிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ? நீங்கள் அவர்களுக்குக் கடந்த 54 ஆண்டுகளாக வாக்களித்து வருகின்றீர்கள். ஆனால் நாட்டு நன்மைக்காக அவர்கள் மாற வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்.
தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் தவிர கெட்ட பழக்கங்களை மாற்றுவது மிகவும் சிரமம். எகிப்து, சிரியா, ஈராக் ஆகியவற்றில் நடப்பதைப் பாருங்கள்.
இந்த ஆட்சியை எதுவும் மாற்ற முடியாது. அது, நாட்டு வளப்பத்தைத் தொடர்ந்து உறிஞ்சி வரும். அவ்வாறு செய்வதற்கான தனது உரிமையைப் பாதுகாப்பதற்காக அது சட்டத்தையும் தனது கைகளில் எடுத்துக் கொள்ளும்.
நாம் என்ன செய்ய முடியும் ? இந்த ஆட்சியை தொடர்ந்து தேர்வு செய்தற்காக உங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
மனோ: ஏப்ரல் 28ம் தேதி பெர்சே கட்டுப்பாட்டை இழக்கவில்லை. போலீஸ்தான் கட்டுப்பாட்டை இழந்தது.
ஜெமி: அதில் என்ன பிரச்னை ? தாக்கப்படும் போலீஸ் அதிகாரிகளுக்கான வழக்கமான நடைமுறையே அது.
சுடாததற்காக நாம் அவரைப் பாராட்ட வேண்டும். எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் பின் வாங்கிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாராட்டுக்கள்.
விளையாட வேண்டாம்: போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான விகிதம் 1:600 ஆக இருக்கும் வேளையில் ஒரு துப்பாக்கி அந்த அதிகாரியை எந்த வகையிலும் பாதுகாக்காது.
ஒரு பிஸ்டலை ஒரு குண்டுடன் ஒப்பிடுவதற்கு ஒப்பாகும். மூர்க்கத்தனம் கொண்ட கும்பல் ஒன்றை எதிர்கொள்ளும் போது தமது பிஸ்டலை உறைக்குள்ளேயே ஒர் அதிகாரி வைத்திருந்தால் அது தற்கொலை செய்து கொள்வதைப் போன்றதாகும்.
அந்த அதிகாரி எச்சரிக்கையை மட்டுமே விடுத்தார். சுடவில்லை. ஆகவே அது நியாயமானது.
ஏசிஆர்: அந்த போலீஸ் அதிகாரி தமது ஆயுதத்தை காட்டும் பிரச்னை மீது சில வாசகர்கள் சொல்லும் கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கிறது.
அடுத்த முறை போக்குவரத்துக் குற்றத்திற்காக அவர்கள் நிறுத்தப்பட்டு அவர்கள் முகத்தில் போக்குவரத்துப் போலீஸ்காரர் துப்பாக்கியை காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்.
பொது மக்கள் பங்கு கொள்ளும் பேரணியில் போலீசார் தங்கள் ஆயுதங்களை உருவுவதே கிரிமினல் அச்சுறுத்தலாகும்.
2007ம் ஆண்டு ஹிண்ட்ராப் பேரணியின் போது கலகத் தடுப்புப் போலீசார் மீது கற்களை எறிந்ததற்காக நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்டத் துறைத் தலைவர் கொலை முயற்சி குற்றச்சாட்டை சுமத்தியது என நினைவுக்கு வருகிறது.
சட்டத்தை நிலை நிறுத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள நமது அரசாங்க அமைப்புக்களில் காணப்படும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது ? அதற்கு டாக்டர் மகாதீர் முகமட்டின் முறைகேடான ஆட்சிக்கு நன்றி கூற வேண்டும். இன்று வரை அந்தப் பாரம்பரியத்தை அம்னோ தொடருகிறது.
சீ ஹோ சியூ: மக்களை மருட்டுவதற்கு அந்தப் போலீஸ் அதிகாரி தமது துப்பாக்கியைப் பயன்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது.
போலீஸ் முரட்டுத்தனம் இவ்வளவு மோசமாகி விட்டதைக் கண்டு நான் உண்மையில் வெறுப்படைந்து விட்டேன். சட்டத்தை நிலை நிறுத்த வேண்டிய ஒர் அதிகாரியிடமே கட்டுக்கோப்பு இல்லை.
விஜார்ஜ்மை: போலீஸ் படையினர் மீது உள்துறை அமைச்சர் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்து விட்டார். அம்னோ வலச்சாரி தரப்புக்காக அவர்கள் இப்போது குண்டர்களாகி விட்டனர்.
பிரதமர் அவர்களே, இது தான் நீங்கள் சொல்லும் உருமாற்றமா ?