உங்கள் கருத்து: ‘இந்த ஆட்சியாளர்களின் முரட்டுத்தனத்துக்கு எதிராக குடிமக்களுடைய சிறந்த தற்காப்பு, தகவல்களும் அவற்றை அம்பலப்படுத்துவதுமாகும்’
இணைய குடி மக்கள் ‘தேடப்படும்’ போலீஸ்காரர்களின் படங்களை வெளியிட்டனர்
பீரங்கி: எதிர்காலத்தில் பொதுப் பேரணிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் தங்களது கேமிராக்களையும் கொண்டு வர வேண்டும். ஒருவர் மடக்கப்பட்டு உதைக்கப்பட்டால் அடுத்து உள்ள நபர் அந்தக் காட்சியைப் படம் பிடிக்க வேண்டும்.
அந்த இரண்டாவது நபரும் பிடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டால் இன்னொருவர் தலையிட்டு படங்களை எடுக்கலாம். போலீஸ்காரர்களின் முரட்டுத்தனங்களை பொது மக்கள் படம் பிடிப்பதிலிருந்து தடுப்பதற்கு போலீஸ் படையிடம் போதுமான போலீஸ்காரர்கள் இல்லை.
அன்றைய தினம் இறுதியில் அந்த ஆதாரங்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாற்று ஊடகங்களில் வெளியிடப்படும் போது போலீசாரின் தோற்றமும் ஆட்சியாளர்களின் நம்பகத்தன்மையும் நெருக்கடிக்கு இலக்காகும்.
இந்த ஆட்சியாளர்களின் முரட்டுத்தனத்துக்கு எதிராக குடிமக்களுடைய சிறந்த தற்காப்பு, தகவல்களும் அவற்றை அம்பலப்படுத்துவதுமாகும்
2zzzxxx: அம்னோ போலீஸ்காரர்கள் நீதிபதிகளாகவும் நடுவர்களாகவும் தீர்ப்பை அமலாக்குகின்றவர்களாகவும் செயல்படும் போது எதுவும் நடக்கும். அது சரி ஏன் இந்த நான்கு அம்னோ போலீஸ்காரர்கள் மட்டும் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளனர் ?
கொதிக்கும் மண்: குழப்பம் மூளுவதற்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் வந்த குழு (போலீசா ?) ஒன்று டாத்தாரன் மெர்தேக்காவில் எங்கோ ஒர் இடத்தில் நின்று மஞ்சள் டி சட்டைகளைப் போட்டுக் கொண்டதைப் பார்த்ததாக ஒருவர் சொன்னார் என இணைய ஊடகம் ஒன்றில் படித்த ஞாபகம் வருகிறது.
அது உண்மை என்றால் அவர் அரசு சாரா அமைப்புக்களில் ஒன்றுடன் தொடர்பு கொண்டு அதனை உறுதி செய்தால் அவர் நாட்டுக்கு பெருத்த நன்மை செய்தவராகக் கருதப்படுவார். தயவு செய்து அதனைச் செய்யுங்கள்.
Hmmmmmmmm: பேரணிகளின் போது வன்முறையாக நடந்து கொண்டவர்களுடைய படங்களை நாம் காட்சிக்கு வைக்க வேண்டும். எதிர்காலத்தில் செராமா நிகழ்வுகளுக்கு இடையூறு செய்கின்றவர்களுடைய படங்களையும் காட்சிக்கு வைக்கலாம். அவர்களுடைய படங்களை இணையத்தில் சேர்க்கலாம். அப்போதாவது அவர்களுக்கு வெட்கம் வரட்டும்.
அடையாளம் இல்லாதவன் #47497449: பெர்சே பேரணி தொடர்பில் மலேசியாகினி வெளியிட்ட படங்கள் அனைத்திலும் காணப்படும் எல்லா போலீஸ்காரர்களும் பெயர் பட்டையையும் எண்களையும் அணிந்துள்ளனர்.
ஆனால் அடிக்கப்பட்டவர்கள், நீல நிறை உடை அணிந்திருந்த பலரிடம் பெயர்ப் பட்டையோ எண்களோ இல்லை என கூறியுள்ளனர். எப்படி இந்த வேறுபாடு ஏற்பட்டது ?
அதனை ஆழமாக சிந்தித்தால் சிறப்பாக தேர்வு செய்யப்பட்ட குழு ஒன்று நாம் பார்த்த அந்த மோசமான நடவடிக்கைகளை நடத்தியுள்ளது. ஆனால் அவர்கள் எங்கு மறைந்து கொண்டிருந்தனர் ? சிக்கலான கேள்வி தான்.
பல படங்களும் வீடியோக்களும் எடுக்கப்பட்டு இணையத்தில் சேர்க்கப்பட்ட போதிலும் நாம் இன்னும் அந்த “குண்டர்” கும்பலை அடையாளம் காண முடியவில்லை. ஏதாவது யோசனை வருகிறதா ?
ஆகவே பெர்சே 3.0ன் போது படங்களை எடுத்தவர்கள் அவற்றை மீண்டும் குறிப்பாக பூட்ஸ்களை குறிப்பாக போலீஸ் பூட்ஸ்களை அணிந்திருக்கின்றவர்களை பார்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். சட்டைகளை மாற்றிக் கொள்வது எளிது. ஆனால் பூட்ஸ்களை மாற்றுவது சுலபமல்ல. அந்த ஊடுருவல்காரர்கள் யார் என்பதை அறிய அது நமக்கு உதவக் கூடும்.
அடையாளம் இல்லாதவன் #88975568: மேலிடத்து ஆசீர்வாதத்துடன் போலீசார் செயல்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்.
லிம் சொங் லியோங்: நாம் அவர்களை துப்பாக்கியால் சுட வேண்டும். நமது கேமிராக்களைக் கொண்டு அவர்களை படம் பிடிப்போம் அவை ‘சம்சிங், மாட் ரெம்பிட்’-களுடைய படங்களாகும். நமது வரிப்பணம் நம்மை பாதுகாப்பதற்காக அல்லாமல் அம்னோ கொடுங்கோலர்களைப் பாதுகாக்க அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் நம்மை உதைப்பதற்கு நாம் அவர்களுக்குப் பணம் கொடுக்கிறோம்.
தான் பெங் சூய்: ஒரு சிறுவன் தனது தந்தையிடம் குற்றச் செயல்களை தனது வாழ்வாதாரமாகக் கொள்ளப் போவதாக கூறினான். அதற்கு தந்தை அளித்த பதில் இது தான்: “தனியார் துறையிலா அல்லது அரசாங்கத் துறையிலா ?”