இந்தியத் தலைநகர் டில்லியின் உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்த வாரம் நடத்தப்பட்டிருந்த குண்டுத் தாக்குதலை இந்தியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலின் பின்னர் முதல்தடவையாக பேட்டியளித்துள்ள சிதம்பரம், இந்தியாவில் நடக்கின்ற தாக்குதல்களில் எல்லை தாண்டிய தீவிரவாதமே முக்கிய பங்கு வகிக்கிறது என்று இனிமேலும் சொல்ல முடியாது என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல் இப்போதும் இருக்கவே செய்கிறது என்றாலும், உள்நாட்டிலேயே தலைதூக்கியுள்ள பயங்கரவாத குழுக்கள் மீது தாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.
ல்லி உயர்நீதிமன்ற வாயிலில் கடந்த புதனன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டும் எழுபதுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருந்தனர்.