‘அது’ ரத்த சேமிப்பு மய்யத்தை தணிக்கை செய்ய டிராகுலாவைத் தேர்வு செய்வதற்கு ஒப்பாகும்

உங்கள் கருத்து:பெர்சே 3.0ல் கம்யூனிஸ்ட்கள் இருப்பதாக ஹனீப் ஒமார் எண்ணுகிறார். அந்தப் பேரணி புரட்சி முயற்சி என்றும் அவர் கருதுகிறார். அவர் முன்னாள் போலீஸ்காரரும் ஆவார். ஆகவே அந்தக் குழு எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயல்பட முடியும் ?

பெர்சே 3.0 விசாரணைக் குழுவுக்கு முன்னாள் ஐஜிபி ஹனீப் ஒமார் தலைமை தாங்குகிறார்

கைரோஸ்: ‘சுயேச்சைக் குழு’ என்னும் அந்த முழு நடவடிக்கையும் வெறும் கண் துடைப்பு ஆகும்.  பெர்சே பேரணியின் நோக்கம் அரசாங்கத்தை வீழ்த்துவதாகும் என அண்மையில் தாம் தெரிவித்த கருத்துக்கள் மூலம் முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் தம்மைத் தாமே தகுதி இழக்கச் செய்து கொண்டுள்ளார்.

அந்தப் பேரணி அமைதியாகவும் விழாக்கோலத்துடனும் நடைபெற்றதைப் பார்க்கும் போது அந்தக்

கருத்துக்கள் நியாயமற்றவை. அபத்தமானவை. பிரதமர் ஏற்கனவே சொன்னதை கிளிப் பிள்ளை போல ஹனீப் ஒமார் ஒப்புவிக்கிறார். ஆகவே அவர் தொடக்கத்திலிருந்தே முற்றிலும் பாகுபாடானவர்.

அவர் எப்படி குழுவுக்குத் தலைமை தாங்க முடியும் ? நியாய சிந்தனை கொண்ட மலேசியர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர் மாற்றப்படா விட்டால் அந்தக் குழு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னரே அதன் மீது நம்பிக்கை போய் விட்டது.

விளையாட வேண்டும்: என்ன வேடிக்கை ? பெர்சேயில் முழுக்க முழுக்க கம்யூனிஸ்ட்கள் நிறைந்துள்ளதாக ஹனீப் ஏற்கனவே கூறியுள்ளார். அது அது ரத்த சேமிப்பு மய்யத்தை தணிக்கை செய்ய டிராகுலாவைத் ( ரத்தத்தை உறிஞ்சும் காட்டேறி) தேர்வு செய்வதற்கு ஒப்பாகும்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனும் நமது நேரத்தை மட்டும் விரயமாக்கப் போவதில்லை. மில்லியன் கணக்கில் மக்கள் வரிப்பணத்தையும் வீணாக்கப் போகிறார்கள்.

முஷிரோ: அந்தக் குழுவுக்கு தலைமை தாங்க ஹனீப்பை நியமித்ததின் மூலம் பொது மக்களுடைய எண்ணம் பற்றியும்  தாம் நியாயமானவராக பார்க்கப்பட வேண்டும் என்பதிலும் தமக்கு அக்கறை இல்லை என்பதை நஜிப் காட்டி விட்டார்.

குவிக்னோபாண்ட்: அந்த “சுயேச்சைக் குழு” குறித்த அறிவிப்பைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். சின் சியூ சட்ட ஆலோசகரும் சினார் ஹரியான் ஆசிரியரும் சுயேச்சையான ஆய்வைத் தர முடியாது. ஏனெனில் அவர்களது தலைக்கு உயரே அனுமதி ரத்து என்ற கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த யூகேஎம் பேராசிரியர், தியோ பெங் ஹாக் மீதான அரச விசாரணை ஆணையம் கயறு திரித்ததைப் போன்ற வேலையச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்க வேண்டு: “போலீசார் நாட்டுப் பற்று காரணமாக வன்முறையில் இறங்கினர். அந்தப் பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் ஆட்டு மந்தைகளை போன்று இயங்கினர்.”

பெட்ரோனாஸ் நிறுவன விவகார தலைமை நிர்வாகி குழு கயறு திரிப்பதை மறைப்பதற்கான பேச்சாளராக இருக்க வேண்டும்.

பெர்சே 3.0 அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கம் கொண்டது என குழுத் தலைவர் அறிவித்துள்ளார்.

முடியாது: அந்தக் குழுவின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது ஊரறிந்த விஷயமாகும். 1970ம் ஆண்டுகளில் தீவிரமாக இயங்கிய கம்யூனிஸ்ட்கள் பெர்சே 3.0ல் ஊடுருவி விட்டனர்  என்ற தமது ஐயம் உண்மையானது என ஹனீப் உறுதி செய்வார்.

ஆகவே அவசர காலத்தைப் பிரகடனம் செய்து நாடாளுமன்றத்தைக் கலைத்து தேசிய நடவடிக்கை மன்றம் llன் வழி நாட்டை ஆள்வதற்கு அவர் பரிந்துரை செய்வார். அந்த மன்றத்துக்கு நஜிப் தலைமை ஏற்பதுடன் டாக்டர் மாகாதீர் ஆலோசகராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் குழு ஆலோசனை கூறும்.

கங்காரு: பெர்சே-க்கு எதிராக பாகுபாடான அறிக்கைகளை குழுவுக்கு தலைமை தாங்கும் ஹனீப் விடுத்துள்ளதால் சாட்சிகள் அதன் விசாரணையைப் புறக்கணிக்க வேண்டும்.

ஒரே கேலிக் கூத்து: அந்த ‘சுயேச்சைக் குழுவுக்கு’ ஹனீப் தலைவர். என்ன கேலிக் கூத்து.  அந்தக் குழுவில் சுல்கிப்லி நூர்டின், ஹசான் அலி, இப்ராஹிம் அலி போன்ற அரசியல்வாதிகளையும்  சேர்த்துக் கொள்ளுங்கள். உலகில் தலை சிறந்த ஜனநாயகத்தில் உலகில் தலை சிறந்த சுயேச்சைக் குழுவாக அது திகழும்.

எஸ்கே லீ: உண்மையில் அரசாங்கம் தவறு செய்கிறது. விசாரணையை நடத்துவதற்குப் பொருத்தமான அமைப்பு சுஹாக்காம் ஆகும். அந்தக் குழு சுதந்திரமானது அல்ல. அதில் பாகுபாடு காட்டக் கூடிய பலர் உறுப்பினர்களாக உள்ளனர். சட்டங்களை கற்றறிந்த வழக்குரைஞர்கள் அந்தக் குழுவில் இல்லை. விசாரணை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. அதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

அடையாளம் இல்லாதவன்#32993250: ஹனீப் கொள்கைப் பிடிப்பு உள்ளவராக இருந்தால் அவர் தம்மை அந்தக் குழுவிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தக் காலத்தில் கொள்கைப் பிடிப்புள்ள மனிதர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர்.