இந்தியத் தூதரகம் மொண்ட் கியாராவுக்கு இடம் மாறுகிறது

கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், ஜாலான் தாமான் டூத்தாவில் உள்ள தனது இப்போதைய இடத்திருந்து வரும் திங்கட்கிழமை தொடக்கம் 28வது மாடி, மெனாரா 1, மொண்ட் கியாரா, எண் 1, ஜாலான் மொண்ட் கியாராவுக்கு இடம் பெயர்கிறது.

எனினும் அந்தத் தூதரகத்தின் கான்சுலர் ( consular ) பிரிவு ஜுன் மாதம் 5ம் தேதி வரை இப்போது உள்ள இடத்திலேயே தொடர்ந்து இருக்கும் என்று அது விடுத்த அறிக்கை கூறியது.

அதன் புதிய தொலைபேசி எண்கள்: 03-62052350, 62052351, 62052352, 62052353 & 62052354; fax: 03-6143 1173; இணையத்தள முகவரி: www.indianhighcommission.com.my

-பெர்னாமா