புக்கிட் டாமன்சாராவிலுள்ள பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகாவின் வீட்டின்முன் “பெர்சே 4.0” என்று கூறிக்கொள்ளும் கூட்டத்தினர் இரவு அஞ்சடிக் கடை திறப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோலாலம்பூர் மேயர் அஹமட் புவாட் இஸ்மாயில் இன்று கூறினார்.
Drainage and Building Act 1974 என்ற சட்டம் மக்கள் மற்றவர்களின் நிலப்பகுதிகளில் உத்தரவின்றி உள்ளே புகுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆகவே அந்தக் கூட்டத்தினர் அவர்களின் நடவடிக்கையைத் தொடரக்கூடாது என்று அவர் கூறினார்.
“அவர்கள் (பெர்சே 4.0 ஏற்பாட்டாளர்கள்) எங்களிடம் அனுமதி கேட்டே ஆக வேண்டும், ஆனால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்…”, என்று அவர் மேலும் கூறினார்.