இசா சட்டத்தில் சீர்திருத்தம், பிரதமர் சிந்திப்பதாகத் தகவல்

2012 ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சர்சைக்குள்ளாகியிருக்கும் பாதுகாப்புச் சட்டத்திற்கு மாற்றங்கள் கொண்டு வந்து கூடுதல் பேச்சு சுதந்திரம் அளிப்பது பற்றியும், சீர்திருத்தங்கள் பற்றி கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி வாக்காளர்களுடான தொடர்பை அதிகரிப்பது பற்றியும் பிரதமர் நஜிப் சிந்தித்து வருகிறார்.

உள்துறை அமைச்சரின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதல் முறையாக தடுத்து வைக்கப்படும் காலத்தைக் குறைப்பது ஆகியவை குறித்து நஜிப் ஆய்வு செய்து வருகிறார் என்று இந்த விசயத்தில் நேரடித் தொடர்புடைய வட்டாரம் இன்று கூறியது.

இச்சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் நஜிப் வரும் வியாழக்கிழமை ஓர் அறிவிப்பைச் செய்வார் அந்த வட்டாரம் கூறியது.

ஆனால், நஜிப் அலுவலக அதிகாரி ஒருவர் இது குறித்து கருத்துரைக்க மறுத்து விட்டார்.

TAGS: