கட்சிகளின் கொள்கை அறிக்கைகளை ஒலிபரப்ப தேசிய ஒலிபரப்பு நிலையமான ஆர்டிஎம்-மிலும் மற்ற ஒலிபரப்பு நிலையங்களிலும் இடமளிப்பதென அமைச்சரவை செய்துள்ள முடிவு பற்றிய விவரங்கள் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படும்.தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம் இன்று இதனைத் தெரிவித்தார்.
“அது நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பதைப் பொறுத்துள்ளது.அது கலைக்கப்பட்டதும் அந்தத் தகவலை வெளியிடுவோம்”, என்று செய்தியாளார்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
இம்முடிவு செய்தித்தாள்களைக் கட்டுப்படுத்தாது என்று கூறிய ரயிஸ், அச்சு ஊடகம் தம் அமைச்சின் கட்டுப்பாட்டில் இல்லை என்றார்.