முன்னாள் அம்னோ உறுப்பினர் அப்துல் காடிர் ஷேக் பாதிர் Parti Ikatan Bangsa Malaysia கட்சியைத் தொடங்கியுள்ளார்.ஒற்றுமையை வலுப்படுத்துவதும் பல்லின அரசியலுக்குப் புத்துயிர் கொடுப்பதும் அதன் குறிக்கோளாகும்.
அது ஓர் அரசியல் கட்சிதான் ஆனாலும் அடுத்த பொதுத் தேர்தலில் அது போட்டியிடாது.அதற்கு “அவகாசம் போதாது” என்று அந்த முன்னாள் சுற்றுலா அமைச்சர் கூறினார்.
“சிலர், நாங்கள் களத்தில் குதிக்க வேண்டும் என்கிறார்கள்.ஆனால், அதற்கு நாங்கள் இன்னும் தயாராக இல்லை”, என்றார் அப்துல் காடிர்.
சிலாங்கூர், ஸ்ரீகெம்பாங்கான், பேலஸ் அஃப் கோல்டன் ஹார்ஸில் இரண்டு மணி நேரம் நீடித்த கட்சித் தொடக்கவிழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“மக்கள் தொடங்கிய இடத்துக்கே திரும்பிச்சென்று நின்றுபோன முன்னாள் அம்னோ தலைவர்களின் முயற்சிகளுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்”, என்றார்.