கோமாஸ் என்ற மனித உரிமைப் போராட்ட அமைப்பு (Pusat Komunikasi Masyarakat) 194 வகையான வாக்காளர் குளறுபடிகளை கண்டு பிடித்துள்ளது.
அவற்றுள் ஒரே பழைய அடையாளக் கார்டு எண்களைக் கொண்ட 84 வாக்காளர்களும் அடங்குவர். ஒரே பழைய அடையாளக் கார்டு எண்களைப் பகிர்ந்து கொண்டுள்ள வாக்காளர்கள் வெவ்வேறு பெயர்களையும் வெவ்வேறான மை கார்டு எண்களையும் பெற்றுள்ளதாக அந்த அமைப்பின் குடியுரிமை, வாக்காளர் கல்விப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அருள் பிரகாஷ் கூறினார்.
நெகிரி செம்பிலானைச் சேர்ந்த மிஜு ஒஜிங், போக் சிக் மாரிப் ஆகியோருடைய பதிவில் அத்தகைய பிரச்னை காணப்படுவதாக அவர் சொன்னார். அவர்கள் இருவரும் ஒரே பழைய அடையாளக் கார்டு எண்ணைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களுடைய பழைய அடையாளக் கார்டு எண் 2008042 எனக் குறிக்கப்பட்டுள்ளது.
கோமாஸ் தனது தேர்தல் கண்காணிப்பு திட்டமான Jom Pantau வழியாக பிப்ரவரி மாதம் முதல் கிடைத்த 1,875 புகார்களில் 500 மீது ஆய்வு நடத்தியுள்ளது.