பினாங்கு டிஏபி நடத்திய கூட்டத்துக்கு பெருந்திரளாக மக்கள் திரண்டனர்

தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் உட்பட பல இந்தியர் பிரச்னைகளை விவாதிப்பதற்காக நேற்று பினாங்கில் டிஏபி ஏற்பாடு செய்த கூட்டத்தில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

ஜார்ஜ் டவுனில் உள்ள பினாங்கு சீனர் நகர மண்டபத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்டனர்.

மாநில டிஏபி தலைவரும் ஆட்சி மன்ற உறுப்பினருமான சாவ் கோன் இயாவ் அந்தக் கூட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

அந்தக் கூட்டம் நிறைவு பெறும் தறுவாயில் கூட்டத்துக்கு வந்த முதலமைச்சர் லிம் குவான் எங் விவாதங்களை முடித்து வைத்துப் பேசினார்.

துணை  முதலமைச்சர் பி ராமசாமி தவிர்த்த மற்ற எல்லா முக்கியமான டிஏபி இந்தியர் தலைவர்களும் அங்கு இருந்தார்கள்.

ஈப்போ பாராட் எம்பி-யும் தேசிய உதவித் தலைவருமான எம் குலசேகரன், துரோனோ சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பேராக் மாநிலச் சட்டமன்ற சபாநாயகருமான என் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்கள்.

என்றாலும் நோய் வாய்ப்பட்டுள்ளதாக கூறப்பட்ட டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், அலுவல் காரணமாக கோலாலம்பூருக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் என் தனசேகரன் ஆகியோர் அங்கு இல்லை.

அம்பிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மனு

லிந்தாங் டெலிமா டிஏபி கிளை ஏற்பாடு செய்த அந்த நிகழ்வில் மலேசிய இந்தியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு விஷயம் மீது தயாரிக்கப்பட்ட மகஜருக்கு ஆதரவாக கையெழுத்துக்களும் திரட்டப்பட்டன.

பெர்சே இணைத் தலைவரும் முன்னாள் வழக்குரைஞர் மன்றத் தலைவருமான அம்பிகா ஸ்ரீனிவாசனை பெர்சே ஆர்ப்பாட்டங்களை எதிர்க்கும் அமைப்புக்கள் அச்சுறுத்துவது தொடர்பான மகஜரே அதுவாகும்.

பேச்சாளர்கள் அம்பிகாவின் பெயரைக் குறிப்பிட்ட ஒவ்வொரு முறையும் கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்தியர்கள் அதிகமாக கலந்து கொள்ளும் எதிர்க்கட்சிக் கூட்டங்களில் அது வழக்கமாக நிகழ்கின்றது.

முன்னாள் இசா கைதியும் அண்மையில் சிலாங்கூரில் குண்டர் தாக்குதலுக்கு இலக்கானவரும் ஹிண்டராப் போராட்டக்காரருமான வி கணபதிராவும் அந்தக் கூட்டத்தில் பேசினார்.

தமிழ்ப் பள்ளிகளுக்கும் இடுகாடுகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிலங்கள் கைப்பற்றப்படுவதாக கூறப்படுவதை எல்லா பேச்சாளர்களும் கண்டித்தனர்.

அத்தகைய கைப்பற்றல் சம்பவங்கள் அண்மைய காலமாக பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகியவற்றில் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை அந்தப் பகுதிகளில் வாழும் இந்தியர்களுடைய உணர்வுகளைத் தூண்டி விட்டுள்ளன.

அந்த விஷயங்களும் அம்பிகா தவறாக நடத்தப்படுவதாகக் கருதப்படுவதும் இந்திய சமூகத்தில் முக்கிய விஷயங்களாகி உள்ளன.

அவை கடந்த தேர்தலில் பிஎன்-னைப் புறக்கணித்த இந்திய வாக்காளர்கள் இப்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக திரும்பி விட்டதாகக் கூறப்படுவது மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.