ஆப்கானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 40 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; மேலும் 37 பயங்கரவாதிதகள் கைது செய்யப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் தேசிய போலீஸ் மற்றும் நேட்டோ நேச நாடுகளின் ராணுவமும் இணைந்து, பயங்கரவாதிகளை பிடிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று, லாக்மான், காந்தகார், கோஸ்து, காஸி ஆகிய பகுதிகளில் போலீசாருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி தாக்குதல் நடந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில், 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; மேலும் 37 பேர் ராணுவத்தினரிடம் சிக்கினர்.