சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை அமைக்க நடவடிக்கை

தமிழீழம்: வடபகுதி சிறுவர்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார துறையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய பின்னர் மாலையில் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதற்கு இந்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ப் பாதுகாப்பு நிலையங்களை கிராம சேவையாளர் பிரிவு மட்டத்தில் உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தலைவர் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: