துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிக்கு இன்று வருகை புரியும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வரவேற்பதற்கு கல்லூரியின் அதிகாரத்துவ நிறமான சிவப்பு நிறத்திலான உடைகளை அணிந்திருக்குமாறு அந்தக் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தது.
ஆனால் அந்த அறிவுரையை மீறி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மஞ்சள் உடைகளை அணிந்திருந்தார்கள். மஞ்சள் நிறம் எதிர்ப்பு உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டதாகும். அத்துடன் தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பின் அடையாளச் சின்னமாக அந்த வர்ணம் திகழ்கிறது.
நஜிப்பை காணும் பொருட்டு முதலாம் ஆண்டு படிக்கும் 20 மாணவர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு சாலை ஒரத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களைச் சுற்றிலும் கல்லூரியின் முக்கிய மண்டபத்துக்குச் செல்லும் சாலையின் இரு மருங்கிலும் சிவப்பு நிற ஆடையை அணிந்திருந்த மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டனர்.
அந்த சிவப்பு நிற உடையை அணிந்திருந்த மாணவர்கள் பிரதமரை வரவேற்கும் பதாதைகளை ஏந்தியிருந்தனர். “ஆ ஜிப் கோர், நீங்கள் எங்களுக்கு தூண்டுகோல்”, ஆ ஜிப் கோர், நாங்கள் உங்களை நேசிக்கிறோம் !!!” எனக் கூறும் வாசகங்களும் அவற்றுள் அடங்கும்.