பிகேஆர் பேராளர்: ‘பிஎன்-னுக்கு தாவ எனக்கு 5 மில்லியன் ரிங்கிட் கொடுக்க முன் வந்தனர்’

2010ம் ஆண்டு பிஎன்-னுக்கு தாவ எனக்கு 5 மில்லியன் ரிங்கிட் கொடுக்க முன் வந்தனர் என பிகேஆர் இந்த்ரா மகோட்டா எம்பி அஸான் இஸ்மாயில் இன்று கூறிக் கொண்டுள்ளார்.

2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் “ஏஜண்டுகள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்திருந்த பல கூட்டங்களின் போது” அவர்கள் அந்தப் பணத்தைக் கொடுக்க முன் வந்தனர் என அஸான் இன்று நிருபர்களிடம் கூறினார்.

“அரசாங்கத்தில் மிகவும் உயரிய பதவியை வகித்த மிகவும் மரியாதைக்குரிய தலைவர் ஒருவரை அந்த ஏஜண்டுகள் பிரதிநிதித்தனர்,” என அவர் நாடாளுமன்ற வளாகத்தில் தெரிவித்தார்.

கட்சி தாவுவதற்கு பிகேஆர் எம்பி-க்களை நெருக்கும் பொருட்டு இரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கு அஸான் தமது “நட்சத்திர சாட்சி” என அங்கிருந்த பாஸ் ஷா அலாம் எம்பி காலித் சமாட் தெரிவித்தார்.