பிரபல குளிர்பானங்களான கோக கோலா, பெப்சி போன்றவற்றில் ஆல்கஹால் கலப்பு உள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்றனர்.
ஆனால்,இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.