வவுனியா சிறைச்சாலையில் இரு குழுக்களிடையே மோதல்

வவுனியா சிறைச்சாலையில் இன்று இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக எழுவர் காயமடைந்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இரு குழுக்களிடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் மோதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி. டபிள்யூ கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.